இலங்கைக்கு எரிபொருள் வழங்க வெளிநாட்டு நிறுவனங்கள் மறுப்பு: சம்பிக்க..! - Sri Lanka Muslim

இலங்கைக்கு எரிபொருள் வழங்க வெளிநாட்டு நிறுவனங்கள் மறுப்பு: சம்பிக்க..!

Contributors

இலங்கைக்கு எரிபொருள் வழங்குவதற்கு வெளிநாட்டு நிறுவனங்கள் மறுத்து வருவதாக தெரிவிக்கிறார் சமகி ஜனபல வேகய நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க.

கோப் குழு நடாத்திய விசாரணையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இதுவரை 2.6 பில்லியன் டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ளமை தெரிய வந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் திறைசேரியில் கையிருப்பில் இருக்கும் 4 பில்லியன் டொலரிலிருந்து இக்கடன் தொகையைச் செலுத்தினாலே நாடு வங்குரோத்தாகி விடும் என அவர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team