இலங்கைக்கு கடத்தவிருந்த 5 கோடி பெறுமதியான ஹெரோயின் மீட்பு - Sri Lanka Muslim

இலங்கைக்கு கடத்தவிருந்த 5 கோடி பெறுமதியான ஹெரோயின் மீட்பு

Contributors

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ஹெரோயின் போதைப் பொருள் இந்தியாவில் மீட்கப்பட்டுள்ளது.

இந்திய மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் குறித்த போதைப் பொருளை கைப்பற்றியுள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் இரண்டு 2,075 கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருளை சென்னையிலிருந்து மத்திய பிரதேசத்தின் உஜ்ஜாயின் என்னும் இடத்திற்கு எடுத்துச் சென்றிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த போதைப் பொருளின் சர்வதேச சந்தைப் பெறுமதி 5 கோடி ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது.

போதைப் பொருளை இலங்கைக்கு கடத்தும் நோக்கில் குறித்த நபர் எடுத்துச் சென்ற போது உஜ்ஜாயின் பஸ் நிலையத்தில் வைத்து, போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

45 வயதான ராபீக் சுலைமான் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். (ad)

Web Design by Srilanka Muslims Web Team