இலங்கைக்கு சர்வதேச சமூகம் பாராட்டு - Sri Lanka Muslim
Contributors

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் சுகாதார சேவையை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வது குறித்து இலங்கைக்கு சர்வதேச சமூகம் பாராட்டு தெரிவித்துள்ளது.

கொவிட் வைரஸ் பரவலினால் நாட்டில் தாய் மரணங்கள் அதிகரித்திருப்பதாக வெளியாகியுள்ள செய்தி உண்மைக்குபுறம்பானதாகும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியம் வலியுறுத்தியுள்ளது.

சுகாதார அமைச்சுடன் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் சவாலான காலப்பகுதியில் தாய்-சேய் சுகாதார சேவைகளை தொடர்ச்சியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோன வைரஸ் பரவல் இடம்பெற்ற காலப்பகுதியிலும் தாய்-சேய் சுகாதார சேவையில் இடம்பெறும் பாதகமான விளைவுகளை தடுக்க இலங்கை மேற்கொள்ளும் கூட்டு முயற்சிகள் பாராட்டத்தக்கவையாகும் என்று ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது,

Web Design by Srilanka Muslims Web Team