இலங்கைக்கு G-77 நாடுகள் குழுவின் தலைமை பதவி - Sri Lanka Muslim

இலங்கைக்கு G-77 நாடுகள் குழுவின் தலைமை பதவி

Contributors

G-77 நாடுகளின் குழுவின் வியன்னா அலுவலகத்தின் 2014ஆம் ஆண்டுக்கான தலைமை பதவி இலங்கைக்கு கிடைத்துள்ளது.

இதனையடுத்து புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வியன்னாவிலுள்ள இலங்கையின் நிரந்தர பிரதிநிதியான ஏ.எல்.ஏ.அஸீஸ் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக நேற்று பொறுப்பேற்றுள்ளார்.

‘இந்த பதவிக்கு தான் தெரிவானதையிட்டு இலங்கை அரசாங்கம் மகிழ்ச்சியடையும்’ என ஏ.எல்.ஏ.அஸீஸ் இதன்போது தெரிவித்தார்.

இவருக்கு முன்னர் வியன்னாவிற்கான சூடானின் நிரந்தர பிரதிநிதி மஃமூத் எலாமின் இந்த குழுவின் தலைவராக பதவி வகித்தார். இந்த குழு 1964ஆம் ஆண்டு 77 நாடுகளைக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள்; கைத்தொழில் அபிவிருத்தி நிறுவனத்தில் நிதிப்படுத்தப்படும் இந்த குழுவின் தொழில்நுட்ப ஒத்துழைப்பு செயற்பாடுகள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு என்பவற்றை இலக்காகக் கொண்டு செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team