இலங்கையர் ஒவ்வொருவர் மீதும் 321472 ரூபா கடன் ! - Sri Lanka Muslim

இலங்கையர் ஒவ்வொருவர் மீதும் 321472 ரூபா கடன் !

Contributors

இலங்கையில் தனி நபர் கடனானது சராசரியாக மூன்று லட்சத்து 21 ஆயிரத்து 472 ரூபா என பிரதி நிதியமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம நேற்று பாராளு மன்றத்தில் தெரிவித்துள்ளார் .ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்

சுஜீவ சேனரசிங்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

நாட்டின் மொத்த கடன் தொகையானது 6 ஆயிரத்து 518 பில்லியன் எனவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார் . இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து பெருந் தொகை பணத்தை கடனாக பெற்றுள்ளதுடன் உள்நாட்டு வங்கிகளிலும் கடனை பெற்றுள்ளது.

இந்த நிலையில் வருடாந்தம் பெறப்பட்ட கடனுக்காக அரசாங்கம் பெருமளவான பணத்தை வட்டியாக செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team