இலங்கையர் துவான் இஸ்மாயிலுக்கு மகாராணியின் உயர் கௌரவம் - Sri Lanka Muslim

இலங்கையர் துவான் இஸ்மாயிலுக்கு மகாராணியின் உயர் கௌரவம்

Contributors

கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றி ஓய்வு பெற்ற துவான் இஸ்மாயிலுக்கு பிரித்தானிய மகாராணி உயர் விருது அளித்து கௌரவித்துள்ளார்.
பிரித்தானியா மகாராணியாரின் 2013 ஆண் ஆண்டுக்கான கௌரவ பட்டியலில் துவான் இஸ்மாயிலின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இதற்கமைவாகவே இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.
பொது நலவாய மாநாட்டில் கலந்து கொள்ளும்பொருட்டு அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த இளவரசர் சார்ள்ஸ் விசேட நிகழ்வொன்றில் வைத்து இந்த விருதை மகாராணியில் சார்பில் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பிரித்தானிய வெ ளிவிவகார செயலாளர் வில்லியம் ஹேக், இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர், மற்றும் துவான் இஸ்மாயிலின் குடும்பத்தினர் ஆகியோலும் கலந்து கொண்டனர்.
1983 ஆம் ஆண்டு பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் இணைந்து கொண்ட துவான் இஸ்மாயில் 1993 இல் சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தராக பதவி உயர்வு பெற்றதுடன் 2013 இல் ஓய்வு பெறும் வரை பாதுகாப்புப் படையின் தலைமைப் பதவியையும் வகித்தார்.
இக்கட்டான காலகட்டங்களில் கூட தனது அர்ப்பணிப்பும் திறமையும் மிக்க சேவையினை வழங்கியமைக்காகவே துவான் இஸ்மாயிலுக்கு இந்த உயர் விருது வழங்கப்பட்டதாக கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.(v)

 

Web Design by Srilanka Muslims Web Team