இலங்கையின் அரசியல் தொடர்புடைய குடும்பத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து உடனடியாக விசாரணை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவு..! - Sri Lanka Muslim

இலங்கையின் அரசியல் தொடர்புடைய குடும்பத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து உடனடியாக விசாரணை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவு..!

Contributors

உலகெங்கிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பண்டோரா பேப்பரில் இலங்கையர்களின் கொடுக்கல் வாங்கல்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

இன்று காலை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்துக்கு ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்தார்.

குறித்த விசாரணை அறிக்கையை ஒரு மாதத்துக்குள் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team