இலங்கையின் இன்றையநிலை - பாண் வாங்குவதற்காக அடகுவைக்கப்பட்ட திருமண மோதிரம்..! - Sri Lanka Muslim

இலங்கையின் இன்றையநிலை – பாண் வாங்குவதற்காக அடகுவைக்கப்பட்ட திருமண மோதிரம்..!

Contributors
author image

Editorial Team

தற்போதைய கொரோனா சூழ் நிலையில் தொழிலை இழந்த குடும்பத்தலைவர் ஒருவர் பாண் வாங்குவதற்காக தன்னிடமிருந்த பெறுமதியான ஒரேயொரு திருமண மோதிரத்தை அடகு வைத்த சம்பமொன்று பதிவாகியுள்ளது.

வத்தளையைச் சேர்ந்த பலித நந்தசிறி என்பவரே இவ்வாறு மோதிரத்தை அடகு வைத்தவராவார்.

நாளாந்தம் ஊதியம் பெறும் தொழிலாளர்களில் அவரும் ஒருவர். அவர் தொழிற்சாலையில் பணியாற்றுவதால் கிடைக்கும் வருமானத்தை மாத்திரம் இழக்கவில்லை ஞாயிற்றுக்கிழமைகளில் தோட்டத்தை சுத்தம் செய்வது போன்ற வேலையையும் இழந்துள்ளார்.

பேக்கரி உணவுகளுடன் செல்லும் வாகனங்களை பார்த்துக்கொண்டிருக்க வேண்டியுள்ளது பாண் வாங்குவதற்குக் கூட பணமில்லை என அவர் தெரிவித்தார். எனது அயலவரே எனக்கு உதவுகின்றார் எனவும் அவர் தெரிவித்தார்.

எனினும் முடக்கல் நிலையின் போது அவர்களாலும் தனக்கு உதவ முடியாத நிலையேற்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team