இலங்கையின் இராஜதந்திரிகளாக அரசியல்வாதிகளின் உறவினர்கள் நியமனம் - ஆங்கில செய்திதாள் - Sri Lanka Muslim

இலங்கையின் இராஜதந்திரிகளாக அரசியல்வாதிகளின் உறவினர்கள் நியமனம் – ஆங்கில செய்திதாள்

Contributors

இலங்கையின் சார்பில் வெளியுறவு சேவையில் அரசியல்வாதிகளின் உறவினர்களும் நண்பர்களுமே அதிகமாக பணியாற்றுவதாக இலங்கையின் ஆங்கில செய்திதாள் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக, இலங்கையின் முதல் பெண் ஷிராந்தி ராஜபக்சவின் உறவினர்கள், காலியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய அரசியல்வாதியினது மகன், சப்ரகமுவ மாகாணசபை முதல்வர் மஹிபால ஹேரத்தின் உறவினர், அமைச்சர் லச்மன் யாப்பா அபேவர்த்தனவின் உறவினர், நடிகர் ரவீந்திர ரண்தெனியவின் மகள், ஜனாதிபதியின் பெரும்பாலான உறவினர்களே வெளிநாட்டு சேவையில் பணியாற்றுகின்றனர்

அதேவேளை ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயக்கவின் மகளும் வெளிநாட்டு சேவையில் பணியாற்றுகிறார். நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸின் உறவினரும் வெளிநாட்டு சேவையில் பணியாற்றுகிறார்.

இந்தநிலையில் 62 இராஜதந்திரிகளாக உள்ள இலங்கையர்களில் 48 பேர் அரசியல்வாதிகளின் உறவினர்களே பணியாற்றுவதாக ஆங்கில செய்திதாள் குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக்கு இராஜதந்திர ரீதியில் அழுத்தங்கள் கொடுக்கப்படும் இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான அரசியல் நியமனங்கள், இலங்கையின் இயலாமையை மேலும் அதிகரிக்கும் என்று ஆங்கில செய்திதாள் கூறியுள்ளது.(LW)

Web Design by Srilanka Muslims Web Team