இலங்கையின் உள்ளக விசாரணைகள் சுயாதீனமானவையாக அமையவில்லை : கமரூன் - Sri Lanka Muslim

இலங்கையின் உள்ளக விசாரணைகள் சுயாதீனமானவையாக அமையவில்லை : கமரூன்

Contributors

மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்து இலங்கை அரசாங்கத்தினால் நடத்தப்பட்டுள்ள விசாரணைகளில் அதிகமானவை இராணுவத்தின் தலைமையிலேயே இடம்பெற்றுள்ளதனால் அவை முற்றுமுழுதாக சுயாதீனத்தன்மை கொண்டவையாகவே அமையவில்லை என பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் தெரி­வித்­துள்ளார்.

கொழும்பில் நடை­பெற்று முடிந்த அரச தலை­வர்கள் மாநாட்டில் பங்­கேற்­றி­ருந்த கமரூன் கடந்த ஞாயி­றன்று தாயகம் திரும்­பிய நிலையில் இலங்­கைக்­கான தனது விஜயம் தொடர்­பாக நேற்று முன்­தினம் பிரித்­தா­னிய பாரா­ளு­மன்­றத்தில் ஆற்­றிய விசேட உரையின் போதே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்தும் பேசு­கையில்,
இலங்­கையில் நடந்து முடிந்த இறு­திக்­கட்ட யுத்­தத்­தின போது இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் போர்க்­குற்­றங்கள் மற்றும் மனித உரிமை மீறல் சம்­ப­வங்கள் குறித்து தகுந்த சுயா­தீ­ன­மிக்க விசா­ர­ணை­யொன்று நடத்­தப்­ப­டு­வ­தைக்­கா­ணவே பிரித்­தா­னியா விரும்­பு­கின்­ற­தெ­னவும் இலங்­கைக்­கென பலம்­மிக்க ஐக்­கி­யப்­பட்ட செழு­மை­மிக்க மற்றும் நல்­லி­ணக்கம் எட்­டப்­பட்ட எதிர்­காலம் குறித்து அனைத்து சர்­வ­தேச மாநா­டு­க­ளிலும் கேள்­வி­யெ­ழுப்ப வேண்­டி­யுள்ள பிரித்­தா­னிய வெளி­நாட்டுக் கொள்­கையின் நிலை நிறுத்­தப்­பட்­டுள்ள அங்­க­மொன்­றா­கவே இலங்கை விவ­காரம் தற்­போது விஸ்­வ­ரூபம் எடுத்­துள்­ள­தெ­னவும் தெளி­வு­ப­டுத்­தினார்.vi

Web Design by Srilanka Muslims Web Team