இலங்கையின் சுதந்திர தொழிற்பாட்டு நடவடிக்கையை உலகின் மிகப்பெரிய கடற்போக்குவரத்து ஜாம்பவான் ஆதரிக்கிறது » Sri Lanka Muslim

இலங்கையின் சுதந்திர தொழிற்பாட்டு நடவடிக்கையை உலகின் மிகப்பெரிய கடற்போக்குவரத்து ஜாம்பவான் ஆதரிக்கிறது

kkk

Contributors
author image

ஊடகப்பிரிவு

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கடற் போக்குவரத்து சேவையை மேற்கொள்ளும் ஏ பி மொல்லர் – மேர்ஸ்க் இலங்கை அதன் கப்பல் போக்குவரத்து துறையை சுதந்திரமாக தொழிற்பட எடுத்த முடிவை ஆதரிக்கிறது.

இந்த கப்பல் போக்குவரத்து துறையை சுதந்திரமாக தொழிற்பட முன்மொழியப்பட்ட 2018 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்ட ஆலோசனை மிகவும் முன்னேற்றகரமானது என இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டிருக்கும் ஏ பி மொல்லர் – மேர்ஸ்க் உடைய சிரேஷ்ட தெற்காசிய பணிப்பாளர் ஜூலியன் மைக்கல் பெவிஸ். டென்மார்கின் இலங்கைக்கான தூதுவருடன் அவர் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீனை நேற்று (05 /12 /2017) கொழும்பில் சந்தித்த போது இக்கருத்தை வெளியிட்டார்.

ஏ பி மொல்லர் – மேர்ஸ்க் இன் போக்குவரத்து மற்றும் தள வசதிகள் நிறுவனம் மேர்ஸ்க் லைன் ஏ பி எம் தரிப்பிடங்கள் டம்கோ, ஸ்விட்சர் எண்ட் மேர்ஸ்க் கொள்கலன் கைத்தொழில்களை உள்ளடக்குகிறது. இதன் நீண்ட நோக்கு என்னவெனில் உலக வழங்கல் சங்கிலித் தொடரை தொழிற்பட வழிவகுத்து எமது வாடிக்கையாளர்களுக்கு உலக ரீதியில் வர்த்தகத்தில் ஈடுபட சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுப்பதாகும். இது 130 ற்கும் மேற்பட்ட நாடுகளில் 88000 ஊழியர்களுடன் தொழிற்படும் ஒரு கூட்டிணைப்பு பேரமைப்பாகும்.

இந்நிறுவனம் உலகின் மிகப்பெரிய கடற் போக்குவரத்து நிறுவனத்தை தன்னகத்தே கொண்டுள்ளதற்கு மேலதிகமாக போக்குவரத்து, மின்சக்தி, தள வசதிகள், சில்லறை மற்றும் உற்பத்தி துறைகளில் ஈடுபட்டுள்ளது.

இலங்கை கப்பல் போக்குவரத்து துறையை சுதந்திரமாக செயற்பட வழிவகுத்த 2018 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்ட ஆலோசனை முன்னேற்றகரமானதுடன் இந்நேரத்திற்கு இலங்கைக்கு ஏற்றதுமாகும் என்றார் சிரேஷ்ட பணிப்பாளர் பெவிஸ். அத்துடன் இலங்கை அத்தகைய நடவடிக்கைகளை எடுப்பதற்குரிய அவசியத்தை நாங்கள் புரிந்து கொண்டோம் என அவர் மேலும் கூறினார். அத்தகையதோர் மாற்றம் நீண்டகால தேவையாகும். ஏற்படுத்தப்பட்ட இந்த சுதந்திரத்தன்மை கடற் போக்குவரத்து துறையில் ஈடுபட்டுள்ள ஏனையவர்களுடன் இலங்கை சமமாக போட்டியில் ஈடுபட வழிவகுக்கும். திட்டமிடப்பட்டுள்ள கொழும்பு துறைமுக விஸ்தரிப்பு நடவடிக்கைகளில் பங்காளியாக பணியாற்ற மேர்ஸ்க் ஆர்வமாகவுள்ளது. அதன் மூலம் இலங்கை கப்பல் போக்குவரத்து துறையில் ஈடுபாடு உடைய கூடுதல் பங்காளியாக பணியாற்ற முடியும்.

கடற்போக்குவரத்து மற்றும் தள வசதிகள் துறையில் இருந்துவரும் வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்க கட்டுப்பாடுகளை தகர்த்தெறிந்து அதன் கதவை திறந்து வைத்து இலங்கையை ஒரு கப்பல் போக்குவரத்து மையமாக உருவாக்க நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்பிக்கப்பட்ட 2018 வரவு செலவு திட்டம் வழிவகுக்கிறது.

அண்மைக் காலங்களில் இலங்கையின் கப்பல்துறை முகங்கொடுத்த மிகவும் விரிவான சீர்திருத்தங்களை இந்த வரவு செலவு திட்ட முன்மொழிவுகள் உள்ளடக்கியுள்ளன. இந்த வரவு செலவு திட்ட ஆலோசனைகள் அரசாங்கத்தின் சுதந்திர பொருளாதார மற்றும் சீர்திருத்த திட்டங்களை வலியுறுத்துவது தெளிவாகிறது என்று அமைச்சர் ரிஷாத் தெரிவித்தார்..

அத்துடன் இலங்கை அமைந்திருக்கும் மூலோபாய இடம் கப்பல் போக்குவரத்து மற்றும் தள வசதிகளுக்கு ஏற்றதாக அமைந்துள்ளது. எங்கள் ஐக்கிய அரசாங்கத்தின் நோக்கம் கப்பல் போக்குவரத்து துறையில் ஈடுபட்டுள்ளோரை பாதிக்காத வகையில் அதை விரிவுபடுத்தி சீர்திருத்தங்களை மேற்கொள்வதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

Web Design by The Design Lanka