இலங்கையின் பிரபல தலைவர் ஒருவர் 3 மாதங்களில் உயிரிழப்பார் - கோத்தமி பிக்குனி ஆரூடம்..! - Sri Lanka Muslim

இலங்கையின் பிரபல தலைவர் ஒருவர் 3 மாதங்களில் உயிரிழப்பார் – கோத்தமி பிக்குனி ஆரூடம்..!

Contributors

இலங்கையில் இன்னும் மூன்று மாதங்களில் நாட்டை நேசிக்கும் பிரபல தலைவர் ஒருவர் உயிரிழப்பார் என பல்லேகல கோதமி விகாரையின் விகாராதிபதி கோத்தமி பிக்குனி சிங்கள இணையத்தள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இலங்கையில் பிரபலமான தலைவர் இன்னும் 3 மாதங்களுக்குள் உயிரிழப்பார். எனினும் அவற்றை நம்மால் தடுக்க முடியாது.

அத்துடன் எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் மற்றும் ஒரு பிரபலமான தலைவர் படுத்த படுக்கையாகும் கொடூர நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் காலங்களில் யாரும் எதிர்பாராத பல அதிர்ச்சி சம்பவங்கள் இடம்பெறும். அத்துடன் பலரின் கனவுகள் கலைந்து போகும். 2050ஆம் ஆண்டிலும் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியும். எனினும் அவற்றை எல்லாம் நான் கூறப்போவதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team