இலங்கையின் புர்கா தடை, சர்வதேச ஊடகங்களை ஈர்த்துள்ளது..! - Sri Lanka Muslim

இலங்கையின் புர்கா தடை, சர்வதேச ஊடகங்களை ஈர்த்துள்ளது..!

Contributors
author image

Editorial Team

இலங்கையில் முகத்தை முழுமையாக மூடும் புர்காவை தடை செய்ய எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் கவனம் செலுத்தியுள்ளன.

புர்காவை தடை செய்வதற்கும்,1000 மதராஸா பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நேற்று அறிவித்தமையை அடிப்படையாக கொண்டு சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலகின் முதன்மையான ஊடகங்களான பிபிசி, ரொய்டர், ஏபீசி போன்ற ஊடகங்கள் குறித்த செய்தியை வெளியிட்டுள்ளன.

புர்காவை தடை செய்வதற்கு இலங்கை தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 2 வருடங்களாகியுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இலங்கையில் சிறுபான்மையான முஸ்லிம் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அல் ஜெசீரா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team