இலங்கையின் 14 மாவட்ட கரையோரப்பகுதிகளில் நாளை சுனாமி அனர்த்த எச்சரிக்கை ஒத்திகை! - Sri Lanka Muslim

இலங்கையின் 14 மாவட்ட கரையோரப்பகுதிகளில் நாளை சுனாமி அனர்த்த எச்சரிக்கை ஒத்திகை!

Contributors

தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சுனாமி அனர்த்த எச்சரிக்கை தொடர்பான ஒத்திகை நிகழ்வு நாளை பிற்பகல் 3.00மணிக்கு நாடெங்கிலுமுள்ள 14 மாவட்டங்களை சேர்ந்த கரையோரப்பகுதிகளில் இந்த சுனாமி ஒத்திகை நடைபெற வுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், மற்றும் மாவட்ட செயலகங்களில் இயங்கும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் வளி மண்டலவியல் திணைக்களம் , தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பு மற்றும் இலங்கை தகவல் மையம் என்பன கூட்டாக இணைந்து இந்த சுனாமி அனர்த்த எச்சரிக்கை தொடர்பான ஒத்திகையை நடத்த இருக்கின்றன.

Web Design by Srilanka Muslims Web Team