இலங்கையின் 70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இஸ்லாமிய சமய நிகழ்வு » Sri Lanka Muslim

இலங்கையின் 70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இஸ்லாமிய சமய நிகழ்வு

DSC00925

Contributors
author image

A.S.M. Javid

இலங்கையின் 70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இஸ்லாமிய சமய நிகழ்வு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் கொம்பனி வீதி அக்பர் ஜூம்ஆப்பள்ளிவாசலும் இணைந்து திணைக்களப் பணிப்பாளர் எம்.ஆர்.எம்.மலிக் தலைமையில் கொழும்பு-02இல் உள்ள அக்பர் ஜூம்ஆப்பள்ளிவாசலில் இன்று காலை இடம் பெற்றது.

இந்நிகழ்வில் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, இந்தோனேசிய மற்றும் ஈரான் நாடுகளின் இலங்கைக்கான தூதுவாகள்;, அமைச்சரின் ஆலோசகர் முயுனுதீன், உதவிப்பணிப்பாளர்களான அன்வர் அலி, மௌலவி நூறுல் அமீன், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுதத்hபனத்தின் தலைவர் சித்தீக் பாறுக், திணைக்கள அலுவலர்கள், பள்ளிவாசல்களின் நிருவாகிகள், மத்ரஸா மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது திணைக்களப் பணிப்பாளர் எம்.ஆர்.எம். மலிக் வரவேற்புரையையும், அக்பர் பள்ளிவாசலின் பிரதம கதீப் மௌலவி ஏ.ஏ.எம்.றிப்கான் (ரசாதி) விஷேட உரையையும், அஷ்ஷெய்க் பறூட் விஷேட துஆப்பிரார்த்தனையையும், நன்றியுரையை பள்ளிவாசலின் முகாமைத்துவ நிருவாகி எம்.ரி.ஆர் அக்பரும் வழங்கியதுன் அமைச்சரும் தனது விஷேட உரையை வழங்கினார். இதன்போது ஸைபுல்லா மஹ்தூமின் கிராஅத் நிகழ்வும் இடம் பெற்றது.

02. Minister

DSC00925 WP_20180204_06_36_36_Pro WP_20180204_06_46_39_Pro

Web Design by The Design Lanka