இலங்கையில் ஆயிரக் கணக்கில் மக்கள் இறந்து விழும் நிலை ஏற்படும்..! - Sri Lanka Muslim

இலங்கையில் ஆயிரக் கணக்கில் மக்கள் இறந்து விழும் நிலை ஏற்படும்..!

Contributors

தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமையினை கட்டுப்படுத்தவில்லை என்றால் ஆயிரக் கணக்கானவர்கள் இறந்துவிழும் நிலைமை ஏற்படும் என்று வைரஸ் தொடர்பான பேராசிரியரான முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண எச்சரித்துள்ளார்.

தற்போதைய கொரோனா நிலவரம் தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,

நாட்டை 14 நாட்கள் தொடர்ந்தும் முடக்காமல் வைரஸ் பரவலை எந்த வகையிலும் கட்டுப்படுத்த முடியாது. இரண்டு, மூன்று நாட்கள் மாத்திரம் நாட்டை முடக்குவதால் எந்த பயனும் கிடைக்காது.

இதன் காரணமாக நாட்டை 14 நாட்களுக்கு முடக்குமாறு விசேட மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். நாடு தற்போது பாரதூரமான நிலைமையில் இருக்கின்றது.

நாடு அனர்தத்தை நோக்கி மிக வேகமாக சென்றுகொண்டிருக்கின்றது. நிலைமையை தற்போது கட்டுப்படுத்தவில்லை என்றால், ஆயிரக்கணக்கானவர்கள் இறந்து விழும் நிலைமை ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team