இலங்கையில் ஐந்து லட்சம் பேர் நீரிழிவு நோயால் பாதிப்பு: ஐ.நா - Sri Lanka Muslim

இலங்கையில் ஐந்து லட்சம் பேர் நீரிழிவு நோயால் பாதிப்பு: ஐ.நா

Contributors

இலங்கையில் ஐந்து லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய சம்மேளனம் தெரிவித்துள்ளது.

ஆராச்சியாளர்களின் கண்டுப்பிடிப்பின்படி பயிர்களுக்கு பயன்படுத்தப்படும் இரசாயன போசனை வகைகளே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் பிரசாரங்களின்படி விவசாயிகள் தமது விவசாய உற்பத்திகளுக்கு பல்வகையான மருந்து வகைகளை பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாகவே நீரிழிவு நோய் பரவுகிறது. இதனை தவிர இலங்கை அரசாங்கம் கூறுவதைப்போல இனந்தெரியாத காரணமே இந்த நோய்க்கான காரணம் என்பதை ஐக்கிய நாடுகளின் விவசாய சம்மேளனம் மறுத்துள்ளது.

இலங்கையில் விவசாய உற்பத்தியில் பங்கேற்றுள்ளவர்களில் 20 ஆயிரம் பேர் நீரிழிவு நோயால் இறந்துள்ளனர். 450ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடமத்திய மாகாணத்தில் பரவியிருந்த இந்த நோய் தற்போது தென்பகுதிக்கும் பரவிவருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு சுகாதார வசதிகள் குறித்து திருப்தி அடைய முடியாது: சிவசக்தி ஆனந்தன்

வடக்கின் சுகாதார வசதிகள் தொடர்பில் திருப்தி அடைய முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வட மாகாண எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள வைத்தியசாலையில் பாரியளவில் குறைபாடுகள் காணப்படுகின்றன. போதியளவு வைத்தியர்கள் கிடையாது. தாதியரின் எண்ணிக்கையும் பற்றாக்குறையாகவே காணப்படுகின்றது.

மருத்துவ சாதனங்கள் உள்ளிட்ட ஏனைய வசதிகளும் மேம்படுத்தப்பட வேண்டியுள்ளது.மாகாணத்தில் 335 தாதியருக்கான வெற்றிடம் நிலவி வருகின்றது. வடக்கு மக்களின் இயல்வு வாழ்க்கையை ஏற்படுத்த சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.(tc)

Web Design by Srilanka Muslims Web Team