இலங்கையில் கிள்ளுக் கீரையாக மாறும் முஸ்லீம்களின் சொத்துக்கள்: முடிவுகட்டுமா நல்லாட்சி அரசு? » Sri Lanka Muslim

இலங்கையில் கிள்ளுக் கீரையாக மாறும் முஸ்லீம்களின் சொத்துக்கள்: முடிவுகட்டுமா நல்லாட்சி அரசு?

attac.jpg2.jpg3.jpg4.jpg5.jpg6.jpg7.jpg8

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

 ஏ.எல்.எம்.அஸ்ஹர் (ஹாமி), இறக்காமம்.


நாளாந்தம் முஸ்லீம்களின் உயிரும் உடமைகளும் கலாச்சார விழுமியங்களும் பெரும்பான்மை சமூகத்தின் ஒரு சில கயவர்களினால் கேள்விக்குறியாகி வரும் காட்சி முஸ்லிம் மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்துகிறது எனவே இவ்வாறு அதிகரிப்பதற்கான காரணம் முஸ்லீம் என்ற இரத்தம் எமது உடலில் ஒடுபதினாலேயே ஆகும்.

‘காய்ச்ச மரத்திற்குத்தான் கல்லால் எறிவார்களாம்’; உண்மையில் சிங்கள ராவய அமைப்பினர்; இவ்வாறு நாளாந்தம் காழ்புணர்ச்சி கொண்டு குழப்பங்களை வளர்க்க பின்னனி என்னவெனில் இஸ்லாம் மார்க்கம் தான் உண்மையானது அதன் கொள்கையும் வழிகாட்டல்களும் நடைமுறைக்கேற்றது இதனால் மக்கள் இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்டுகிறார்கள் அந்த வகையில் நாளை எமது பௌத்த நாடும் இஸ்லாமாக மாறிவிடுமோ என்ற அச்சத்திலேயே இவ்வாறு செய்கிறார்கள்.

ஆனாலும் இங்கு கவலைக்குரிய விடையம் என்னவெனில் எமது தாயகம் உலக அளவில் ஓர் ஜனநாயக நாடாக இருந்தும் அது எதிர்பார்க்கும் சட்டத்தின் முன் சகலரும் சமம் என்ற கொள்கை நடைமுறையில் இல்லையே என்பதாகும். ஏனனில் இந்த ராவய அமைப்பானது அடிக்கடி முஸ்லீம்கள் மீது சீறிப்பாய்கிறது ஆனால் எமது அரசின் சட்டம் அவர்கள் விடையத்தில் மட்டும் ஆமை வேகத்தை கடைப்பிடிப்பதுதான் தான் எம்மை பெரும் சோகத்தில் ஆழ்த்துகிறது.

உண்மையில் இப்போது தாயகத்தின் பல பகுதிகளிலும் சிங்கள ராவய அமைப்புகளினால் மேற்கொள்ளப்படும் சொத்துக்களையும், உடமைகளையும் அழிக்கும் விவகாரமானது தனிப்பட்ட ஒரு முஸ்லீமின் பிரச்சிணை அல்ல மாறாக அது முழு முஸ்லீம்களினதும் பிரச்சிணையாகும். அந்த வகையில் எக்காரணம் கொண்டும் அதனை நாம் விட்டுக் கொடுப்பதும் இல்லை விட்டுக் கொடுக்கவும் கூடாது. அப்படி விடுவோமானால் நாளை எமது முஸ்லீம்களின் வாழ்வும் பெரும் கேள்வியாகத்தான் மாறும் எமது பூர்வீகத் தாய் மண்னில்.

என்றாலும் அன்மையில் அம்பாறை நகரில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல கடைகளும், ஜும்ஆ பள்ளிவாயலும் தாக்கப்பட்டது அதேபோல் கண்டி மாவட்டத்தின் திகன போன்ற பகுதிகளில் அப்பாவி மக்களின் மனைகளும், வர்த்தக நிலையங்களும் பள்ளி வாயல்களும் ஒட்டுமொத்தமாக தீக்கிரையாக்னப்பட்டு சூரையாடப்பட்டது. இக் கலவரத்தில் ஒரு அப்பாவி மாணவனின் உயிரும் பறிக்கப்பட்டது. இன்னா லில்லாஹி வஇன்னா இலஹி ராஜிஊன்.

இருப்பினும் தற்போது இக் கலவரத்தில் ஈடுபட்ட பல சூதிரதாரர்கள் இலங்கை காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என சில ஊடகங்கள் அறிக்கை வெளியிட்டுள்ளது. எனவே அவர்களுக்கு கடுமையான சட்டத்தை அரசு வழங்கி இனி வரும் காலங்களில் மனித வளத்திற்கு பாதுகாப்பு உத்தரவு வழங்க அரசு முன்வர வேண்டும்.

இன்னும் பாதிக்கப்பட்ட மக்கள் எவ்வாறு வாழ்ந்தார்களோ அதேபோல அவர்கள் இழந்த அனைத்து இழப்பீடுகளையும் பெற்று சந்தோசமாக வாழ அரசு தனது தாய் மக்கள் என்ற வகையில் முழுக்கவனம் செலுத்த வேண்டும்.

‘உரிமைகள் இன்றி வாழு;வு இல்லை’ என்பார்கள் அந்தவகையில் நாம் அரசியல் யாப்பினால் வரையப்பட்ட உரிமைகளோடுதான் வாழ்கின்றோம் எமது உரிமைகள் அத்து மீறிப்பட்டால் அதற்காக போராட வேண்டும் என யாப்பும் சொல்கிறது இன்னும் எமது இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களும் கூற்pயிருக்கிறார்கள்.

ஆகையால்; நாட்டைச் சூழவுள்ள மக்களின் உடமைகள் கயவர்களினால் சூரையாடப்படாமல் இருக்க  நாம் போராட வேண்டும் அதற்காக எம்மால் பாராளுமன்றத்திற்காக தெரிவு செய்யப்பட்ட அதிகாரம் படைத்த எல்லா முஸ்லிம் அமைச்சர்களும் தங்களது சுய கௌரவத்தை தள்ளிவைய்த்து இவ்விடையத்திலாவது தங்களது குரல்களை ஓங்கச் செய்து அரசிடம் போராடுபதிலேயே அனைத்து மக்களுக்கும் உயர் பாதுகாப்பு கிடைக்கும்.

Web Design by The Design Lanka