இலங்கையில் தமிழர்கள் பூரண சுதந்திரத்துடன் வாழ்கின்றனர் – பசில் ராஜபக்ஸ! - Sri Lanka Muslim

இலங்கையில் தமிழர்கள் பூரண சுதந்திரத்துடன் வாழ்கின்றனர் – பசில் ராஜபக்ஸ!

Contributors

இந்தியப் பிரதமர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளாமை குறித்து  இந்தியாவே கவலையடைய வேண்டுமென, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டிற்கு முன்னோடியாக, கொழும்பில் நடைபெறுகின்ற வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பில் கலந்துகொள்வதற்காக வருகை தந்திருந்த அமைச்சர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.

இலங்கையில் தமிழர்கள் மட்டுமன்றி அனைவரும் பூரண சுதந்திரத்துடன் வாழ்வதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

குறிப்பாக, தமிழகத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கும் போது அவர்கள் தாக்கப்படுவதாகவும், அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இன்றைய தினமும் வலிகாமம் வடக்கில் மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுப்பதாக குறிப்பிட்ட அவர், இலங்கையில் மக்கள் சுதந்திரமாக போராட்டங்களை முன்னெடுக்கவும், கருத்துக்களை வெளியிடவும் சந்தர்ப்பங்கள் உள்ளதாக அமைச்சர் பசில் ராஜபக்ஸ மேலும் குறிப்பிட்டார்.
பசில் ராஜபக்ஸ:-
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு என்பது இலங்கையை குறிக்காது. பொதுநலவாய அமைப்பாகும். குறிப்பாக இந்தியா கலந்துகொள்ள வேண்டும் என்று நான் கருதுகின்றேன். எனினும், அது அவர்களின் தீர்மானமாகும். அது அவர்களின் உள்ளகப் பிரச்சினை என்றே நாம் எண்ணுகின்றோம். பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு என்பது இலங்கை தொடர்பில் நடத்தப்படுகின்ற ஒரு மாநாடு அல்ல என்பதை நான் மீண்டும் கூறிக்கொள்கிறேன்”.

(newsft)

Web Design by Srilanka Muslims Web Team