இலங்கையில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை பார்வையிடும் சந்தர்ப்பம் மீண்டும் - Sri Lanka Muslim

இலங்கையில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை பார்வையிடும் சந்தர்ப்பம் மீண்டும்

Contributors

இலங்கையில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மீண்டும் பார்வையிடும் சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் சுகாதாரப் பிரிவுகள் கவனம் செலுத்தியுள்ளது.

அடுத்த மாதம் நடைபெறும் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியைப் பார்வையிடுவதற்கு விளையாட்டரங்கின் பார்வையாளர் திறனில் 40 அல்லது 50 வீதமானவர்கள் அமர்ந்து பார்வையிட சந்தர்ப்பம் வழங்குமாறு உரிய பிரிவினர்களிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது தெரிவித்துள்ளார்.

இரண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை இலங்கையில் நடாத்துவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Web Design by Srilanka Muslims Web Team