இலங்கையில் புர்காவைத் தடை செய்ய அமைச்சரவைப் பத்திரத்தில் சரத்வீரசேகர கையெழுத்தீடு..! - Sri Lanka Muslim

இலங்கையில் புர்காவைத் தடை செய்ய அமைச்சரவைப் பத்திரத்தில் சரத்வீரசேகர கையெழுத்தீடு..!

Contributors

இலங்கையில் புர்காவை தடை செய்வதற்கான திட்டம் திங்கள்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
 பொதுமக்கள்  பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நேற்று அமைச்சரவை பத்திரத்தில்  கையெழுத்திட்டுள்ளதாக அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
 ஈஸ்டர் ஞாயிறு  தாக்குதலின் பின்  இலங்கையில் புர்காவை தடை செய்வது பற்றி ஜனாதிபதி ஆணைக்குழு  பரிந்துரைத்துள்ளது.
 அவசரகால விதிமுறைகளின் கீழ் 2019 ல் ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் விரைவில் புர்காவை இலங்கை தடை செய்தும் இருந்தது .

Web Design by Srilanka Muslims Web Team