இலங்கையில் புர்கா தடையை தடுக்க தென்னாபிரிக்கா தலையிட வேண்டும்..! - Sri Lanka Muslim

இலங்கையில் புர்கா தடையை தடுக்க தென்னாபிரிக்கா தலையிட வேண்டும்..!

Contributors

இலங்கையில் புர்கா தடைசெய்யப்படுவதை தடுப்பதற்காக தென்னாபிரிக்கா தலையிட வேண்டும் என அந்த நாட்டின் இஸ்லாமிய அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

இலங்கையில் புர்கா தடைமற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய பாடசாலைகள் தடை செய்யப்படுவதை தடுப்பதற்காக தென்னாபிரிக்கா தலையிடவேண்டும் என தென்னாபிரிக்க இஸ்லாமிய அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

தென்னாபிரிக்காவின் ஐக்கிய உலமா சபை தென்னாபிரிக்காவின் சர்வதேச விவகாரங்களிற்கான அமைச்சரை இந்த விடயத்தில் தலையிடுமாறு வேண்டுகோள்விடுத்துள்ளது.

இஸ்லாமியர்கள் குறித்து அரசாங்கத்தின் ஆதரவுடன் பரப்பப்படும் அச்சத்தை தடுத்து நிறுத்துவதற்கு தென்னாபிரிக்காவின் சர்வதேச உறவுகளிற்காக திணைக்களம் தலையிடவேண்டும் என உலமா பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை முஸ்லீம்கள் பிரதான மற்றும் சமூகஊடகங்களில் கடுமையான குரோத பேச்சினை எதிர்கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ள உலமா பேரவை புர்கா தடையும் மத்ரசாக்கள் மூடப்படுவதும் பெரும்பான்iயினத்தவர்களை திருப்திப்படுத்துவதற்கான நடவடிக்கையே அவர்கள்தங்களை குறுங்குழுவாத மற்றும் பிளவுகளை உருவாக்கும் வெறுப்புபிரச்சாரத்தின் மூலம் வளர்த்துக்கொள்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளது

Web Design by Srilanka Muslims Web Team