இலங்கையில் மத ரீதியான பதற்ற நிலைமை தொடர்கிறது: அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் - Sri Lanka Muslim

இலங்கையில் மத ரீதியான பதற்ற நிலைமை தொடர்கிறது: அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம்

Contributors

-எம்.அம்றித்-

இலங்கையில் மத ரீதியான பதற்ற நிலைமை தொடர்ந்து   ஒரு பிரச்சினையாக உள்ளதாக   அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது . முஸ்லிம், இந்து மற்றும் பௌத்த மதத்தவருக்கு இடையில் அடிக்கடி முரண்பாட்டு நிலைமைகள் ஏற்படுவதாக தெரிவித்துள்ளது.

அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தினால் அமெரிக்க காங்கிரசுக்கு சமர்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேற்படி குறிப்பிட்டப்பட்டுள்ளது.  அந்த  அறிக்கையில் இலங்கை நிலைமைகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. கிறிஸ்தவ சமூகத்துக்கு எதிரான தாக்குதல் மற்றும் 2011 ஆம் ஆண்டு முஸ்லிம் மதத் தளம்     பௌத்த பிக்குகள் உடைத்தமை   இலங்கையில் பதட்டமான நிலையை தூண்டுகிறது .

யுத்த நிறைவின் பின்னர் 6000 புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு திரும்பியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், இந்தியாவிலிருந்து நாடு திரும்ப விரும்பும் தமிழர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் இந்தியாவில் தொழில்களில் ஈடுபட மத்திய அரசாங்கம் அனுமதியளிப்பதில்லை, எனினும் சட்ட ரீதியற்ற முறையில் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. என்றும் தெரிவித்துள்ளது

Web Design by Srilanka Muslims Web Team