இலங்கையில் முதல் முறையாக..! சாட்சியத்தை ஸ்கைப் வழியாக பெற தீர்மானம் - Sri Lanka Muslim

இலங்கையில் முதல் முறையாக..! சாட்சியத்தை ஸ்கைப் வழியாக பெற தீர்மானம்

Contributors

இலங்கையில் முதல் முறையாக குற்றவியல் வழக்கொன்றின் சாட்சியத்தை ஸ்கைப் தொழில்நுட்பத்தின் வழியாக பெறுவது என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று 06-11-2013 தீர்மானித்தது.

கொழும்பு கொள்ளுப்பிட்டி எல்பர்ட் பிரதேசத்தில் உள்ள கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான காணி ஒன்றை மோசடியாக பெற்றார் என முன்னணி வர்த்தகர் ஒருவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் பிரதான சாட்சியாளரிடம் இருந்த இவ்வாறு ஸ்கைப் மூலமாக சாட்சியம் பெறப்பட உள்ளது. சாட்சியாளர் தற்பொழுது நியூசிலாந்தில் தொழில் புரிந்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஜயசூரிய நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team