இலங்கையில் மேற்குநாடுகளில் காணப்படுவது போல் மத சுதந்திரம் உள்ளது -சமரசிங்க - Sri Lanka Muslim

இலங்கையில் மேற்குநாடுகளில் காணப்படுவது போல் மத சுதந்திரம் உள்ளது -சமரசிங்க

Contributors

மேற்கு நாடுகளில் எந்த அளவு மத சுதந்திரம் பேணப்படுகின்றது என்பதை உணர்ந்து அதற்கு எற்றகையில் செயற்பட வேண்டும் என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

எமது நாட்டில் சகல மதத்திற்கும் சுதந்திரம் வழங்கப்பட்டு நல்ல முறையில் பேணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எமது நாட்டின் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை தொடர்ந்தும் முன்வைத்து வரும் மேற்கு நாடுகளுக்கு நாம் உரிய பதிலை வழங்க முடியும்.

பாயகலவில் இடம்பெற்ற நிகழ்வென்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். (soor fm)

Web Design by Srilanka Muslims Web Team