இலங்கையில் ரயிலை இயக்கும் பேய்கள்! திடுக்கிடும் பல அதிர்ச்சித் தகவல்கள்.. - Sri Lanka Muslim

இலங்கையில் ரயிலை இயக்கும் பேய்கள்! திடுக்கிடும் பல அதிர்ச்சித் தகவல்கள்..

Contributors

கடந்த வாரம்  கொழும்பில், இயங்கிய நிலையில் தரித்து நிறுத்தப்பட்டிருந்த ரயில் இயந்திரம் ஒன்று, சாரதி இல்லாத நிலையில் கரையோர ரயில் பாதையில் திடீரென பயணித்தது.

குறித்த ரயில் இயந்திரம், தெமட்டகொட பகுதியிலிருந்து இரத்மலானை பகுதி வரை பயணித்தது. இச்சம்பவம் சிறிலங்காவில் பெரும் பரபரப்பை ஏற்பட்டிருந்தியிருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் குமார வெல்கம, அதிர்ச்சிகரமான தகவலொன்றை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது,

“மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைக் குழு வாக்குமூலங்களை பதிவு செய்து வருகின்றனர். இதன் பின்னணியில் பல விடயங்கள் உள்ளன. அறிக்கை கிடைக்கப் பெற்ற பின்னர் அது தொடர்பில் பல விடயங்களை விரிவாக தெரிவிக்க முடியும்.

குறித்த என்ஜின் பிரதான தண்டவாளத்திற்குள் பிரவேசித்த உடனே சாரதியின்றி சென்றுள்ளமை அறிவிக்கப்பட்டுள்ளதுடன் கட்டுப்பாட்டு அறையிலும் பதிந்துள்ளது.

எனினும் அந்த என்ஜினை இடைநடுவில் மறித்திருந்தால் தண்டவாளம் புரண்டிருக்கும். அவ்வாறு புரழும் பட்சத்தில் அன்றைய தினம் காலை அந்த தண்டவாளத்தில் பயணிக்க பட்டியலிடப்பட்டிருக்கும் ரயில் போக்குவரத்தில் பெரும் தாமதம் ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கும். இதனை தவிர்க்கும் வகையிலேயே இரத்மலானை வரை அனுப்பி வைக்கப்பட்டு அம்பியுலன்ஸ் வண்டியில் மூன்று அதிகாரிகள் சென்று பாய்ந்து தடுத்து நிறுத்தி யுள்ளனர்.

என்ஜினை நிறுத்தும் போது அதன் வாயில் சாவி தொங்கிய வண்ணம் இருந்துள்ளது. எனினும் என்ஜினுக்குரிய சாவி பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்துள்ளது. பழைமையான என்ஜின் என்பதால் இதற்கு சகல சாவிகளையும் பயன்படுத்த முடியும் எஸ் – 11 ரக சாவியே தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த என்ஜின் பயணித்த போது சகல ரயில் கடவைகளும் தானாக மூடப்பட்டுள்ளது. ஏனெனில் அது தன்னியக்க முறையில் செயற்படும் ஒன்றாகும். குறித்த கடவைக்கு சாரதி உள்ளாரா இல்லையா என்பதை பார்க்காது தண்டவாளத்திற்குள் வந்தால் அது செயற்படும் என்றார்.

என்றாலும் இது நாசகாரிகளின் செயலா இயந்திர கோளாறா என்பது தொடர்பில் தொடர்ந்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார்.

அதேபோன்று அலவ்வை பிரதேசத்தில் இடம்பெற்ற ரயில் விபத்தின் போது அதன் சாரதியும் உதவியாளரும் உயிரிழந்தனர். அந்த சந்தர்ப்பத்தில் அந்த ரயிலின் சாவி காணாமல் போயிருந்தது. அது இன்னும் கிடைக்கவில்லை. சிலநேரம் அந்த சாவிதான் பயன்படுத்தப்பட்டதா என்பதும் தெரியாத புதிராக உள்ளது. அதேபோன்று பேயின் செயலாகவும் கூறப்படுகிறது. இதனையும் மறுக்கவோ தட்டிக் கழிக்கவோ முடியாது” என்றார்.

சம்பவம் தொடர்பில் நேரில் கண்டவர்கள் எவரும் இல்லாததால் வாக்குமூலம் பெறுவதில் விசாரணைக் குழுவினர் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் பீ. ஏ. பீ. ஆரியரத்ன தெரிவித்தார்.

எனவே குறித்த என்ஜினை மீண்டும் அதே இடத்திற்கு கொண்டு வந்து இயக்கி மீண்டும் பயிற்சித்து பார்க்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன் என்றார்.(j.n)run_train_002

Web Design by Srilanka Muslims Web Team