இலங்கையில் வன்முறையை தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து,நிரந்தர அமைதிக்கு வழிவகை செய்ய வேண்டும் - INTJ » Sri Lanka Muslim

இலங்கையில் வன்முறையை தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து,நிரந்தர அமைதிக்கு வழிவகை செய்ய வேண்டும் – INTJ

intj1

Contributors
author image

Shahul Hameed (India Reporter)

இலங்கையில் முஸ்லீம்களுக்கு எதிராக நடைபெற்று வரும் கலவரங்களுக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர்,துணைத் தலைவர் முஹம்மது முனீர்,பொதுச் செயலாளர் முஹம்மது சித்தீக்,துணைப் பொதுச்செயலாளர் முஹம்மது ஷிப்லி,பொருளாளர் பிர்தவ்ஸ் ஆகியோர்,தென் இந்தியாவிற்கான இலங்கை துணை உயர் ஆணைய அதிகாரி கிருஷ்ண மூர்த்தியை நேரில் சந்தித்து கோரிக்கை கடிதம் அளித்தனர்.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர் எழுதியுள்ள கோரிக்கை கடிதத்தில்…”கடந்த வாரம் இலங்கையில் உள்ள கண்டி,அம்பாறை பகுதிகளில் சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தின் மீது பெரும் வன்முறைத் தாக்குதல் நடைபெற்றன.இத் தாக்குதலில் இருநூறுக்கும் மேற்பட்ட கடைகள்,பெரும் எண்ணிக்கையிலான வீடுகள்,11 பள்ளிவாசல்கள் முற்றிலும் சேதப்படுத் தப்பட்டுள்ளன.இது தமிழக முஸ்லிம்கள் மற்றும் உலக முஸ்லிம்கள் மத்தியில் மட்டுமல்லாது மனித நேய ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பையும்,மன வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்,இலங்கை அதிபர் மைத்ரிபால சிரிசேனா அவர்கள் எடுத்த துரித நடவடிக்கைகள் சிறிது ஆறுதலைத் தருகிறது. கலவரத்திற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது வதந்திகள் பரப்பட்டதுதான் என்பதை கண்டறிந்து அதை மேலும் பரவாமல் தடுத்து நிறுத்தியது,காவல்துறையை சரிவர நிர்வாகிக்காத பிரதமர் ரணில் விக்ரம சிங்கேவிடமிருந்து காவல்துறை பதவியை பறித்தது,கலவரம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற 3 நீதிபதிகள் கொண்ட கமிஷன் வைத்தது போன்றவை சிறப்பான நடவடிக்கைகள் ஆகும்.

இதற்கு தமிழக முஸ்லிம்கள் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்வது மட்டுமல்லாமல் இலங்கை அரசுக்கு இரண்டு கோரிக்கைகளை முன் வைக்கிறோம். 1.கலவரத்தின் காரணமாக பெரும் பொருளாதார இழப்பையும், உயிரிழப்பையும் சந்தித்த முஸ்லிம் சமுதாய மக்களுக்கு இலங்கை அரசு உரிய இழப்பீட்டை தர வேண்டும்.விசாரணைக் குழுவில் தற்போது பதவியில் உள்ள நீதிபதி ஒருவரை நியமிக்க வேண்டும்..இலங்கையில் வன்முறையை தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து,நிரந்தர அமைதிக்கு வழிவகை செய்ய வேண்டும்.தமிழக முஸ்லிம் சமுதாயத்தின் சார்பாக வைக்கப்பட்டுள்ள இந்த கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருமாறு இலங்கை அதிபர் மைத்ரிபால சிரிசேனா அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.”என தெரிவித்துள்ளார்.

Web Design by The Design Lanka