இலங்கையில் வீரியமடையும் 3 வது கொரோனா அலை..! - Sri Lanka Muslim

இலங்கையில் வீரியமடையும் 3 வது கொரோனா அலை..!

Contributors

கொவிட் மூன்றாவது அலை ஆரம்பமாகும அவதானம் காணப்படுவதாக இலங்கையின் இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

எதிர்வரும் பண்டிகை காலத்தில் அரசாங்கத்தினால் உரிய வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படாவிடின் பாரிய விளைவுகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்று அக்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 

நாட்டில் தற்போது பரவி வரும் தொற்றுநோய் காரணமாக நாம் கொண்டாடவிருக்கும் ஈஸ்டர் பெருநாள் மற்றும் சித்திரை புதுவருட பிறப்பு என்பவற்றை பாதுகாப்புடன் நாம் பாதுகாப்புடனும் அவதானத்துடனும் கொண்டாட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் சுகாதார அமைச்சினால் கூறப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களை உரிய முறையில் கடைப்பிடித்து அதற்கமைய நாம் பண்டிகைகளை கொண்டாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் 

இல்லையெனில் இலங்கை மூன்றாவது கொரோனா அலைக்கும் முகம் கொடுக்க நேரிடும் என அவர் எச்சரித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team