இலங்கையில் 18,777 சிறுவர் துர்நடத்தை சம்பவங்கள் - Sri Lanka Muslim

இலங்கையில் 18,777 சிறுவர் துர்நடத்தை சம்பவங்கள்

Contributors

2009 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரையில் 18,777 சிறுவர் துர்நடத்தை மற்றும் துஷ்பிரயோகங்கள் நடைபெற்றுள்ளதாக அமைச்சர் திஸ்ஸ கரலியத்த நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தண்டனை சட்டக்கோவையில் குறிப்பிடப்பட்டுள்ள சிறுவர் துஷ்பிரயோகங்கள், 9676 என்றும் சிறுவர்களை வேலைக்கமர்த்தல் சம்பவங்கள் 771 என்றும் பொறுப்பும் பாதுகாப்பும் அவசியமான சிறுவர்களின் துஷ்பிரயோகங்கள் 3232 எனவும் பதிவாகியுள்ளது.

அத்துடன் கட்டாயக் கல்வி சட்டத்தை மீறிய 2278 சம்பவங்களும், வேறுவிதமான துஷ்பிரயோகங்கள் 2820 சம்பவங்களும், சிறுவர் சிறுமியர் மீதான துஷ்பிரயோக சம்பவங்களின் தன்மையின் படி 418 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

தாய் அல்லது தந்தை வெளிநாடு செல்வதால் 2010 முதுல் 2012 வரையிலான காலப் பகுதியில் 24 சிறுவர் சிறுமிகள் துர்நடத்தைக்கு உள்ளாகி யுள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team