இலங்கையில் 526ஆவது கொரோனா மரணம் பதிவு - 48 வயதான பெண் மரணம் - Sri Lanka Muslim

இலங்கையில் 526ஆவது கொரோனா மரணம் பதிவு – 48 வயதான பெண் மரணம்

Contributors

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 5 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தற்போது (13) அறிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்கனவே 525 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 01 மரணத்துடன், இலங்கையில் இதுவரை 526 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

இவ்வாறு அறிவிக்கப்பட்டவர்களில், ஒருவர் இன்றும் (12), மூவர் நேற்றும் (11), ஒருவர் நேற்றுமுன்தினமும் (10) மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

526ஆவது மரணம்
கனத்தேவெவ பிரதேசத்தைச் சேர்ந்த, 48 வயதான பெண் ஒருவர், குருணாகல் போதனா வைத்தியசாலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (12) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், மூச்சுக் குழாய் அழற்சி நியூமோனியா மற்றும் குருதி விஷமடைவு, என அறிவிக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team