இலங்கையில் 559ஆவது கொரோனா மரணம் பதிவு - கொழும்பு 06 ஐச் சேர்ந்த, 82 வயதான ஆண் - Sri Lanka Muslim

இலங்கையில் 559ஆவது கொரோனா மரணம் பதிவு – கொழும்பு 06 ஐச் சேர்ந்த, 82 வயதான ஆண்

Contributors

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தற்போது (27) அறிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்கனவே 558 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஒரு மரணத்துடன், இலங்கையில் இதுவரை 559 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

இவ்வாறு அறிவிக்கப்பட்டவர் நேற்றுமுன்தினம் (25) மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

559ஆவது மரணம்
கொழும்பு 06 (வெள்ளவத்தை/ கிருலப்பனை) பிரதேசத்தைச் சேர்ந்த, 82 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று முன்தினம் (25) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா நிலை, என அறிவிக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team