இலங்கை அணியின் அபார துடுப்பாட்டம் - Sri Lanka Muslim
Contributors

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் இலங்கை அணி 24 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

நேற்றிரவு டுபாயில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கையின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான டில்ஷான் (48) மற்றும் குசல் பெரேரா (84) ஆகியேர் சிறந்த தொடக்கத்தை பெற்றுக் கொடுத்தனர்.

மேலும் சங்கக்கார ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களை விளாச, இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மூன்று விக்கெட்டுக்களை இழந்து 211 ஓட்டங்களைக் குவித்தது.

212 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 187 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இதன்மூலம் 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றியைத் தனதாக்கியது.

போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதை குசல் பெரேராவும் தொடரின் சிறப்பாட்டக்காரர் விருதை ஷகிட் அப்ரிடியும் வென்றனர்.

இதன்படி இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 தொடர் 1-1 என சமப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் ஐ.சி.சி இருபதுக்கு இருபது போட்டியின் தரப்படுத்தலில் தொடர்ந்தும் முதலிடத்தை இலங்கை அணி தக்க வைத்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team