இலங்கை அணியின் வேகப்பந்து பயிற்றுவிப்பு ஆலோசகராக மலிங்க நியமனம்? - Sri Lanka Muslim

இலங்கை அணியின் வேகப்பந்து பயிற்றுவிப்பு ஆலோசகராக மலிங்க நியமனம்?

Contributors

இலங்கை அணியின் வேகப்பந்து பயிற்றுவிப்பு ஆலோசகராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கை நியமிக்குமாறு கிரிக்கெட் ஆலோசனை குழு ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிறைவேற்று குழுவிற்கு பரிந்துரை செய்துள்ளது.
அவுஸ்திரேலியாவிற்கு எதிரான ஐந்து டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் லசித் மலிங்க இலங்கை அணியுடன் இணையவுள்ளார்.
லசித் மலிங்கை வேகப்பந்து பயிற்றுவிப்பு ஆலோசகராக நியமிப்பது குறித்து கிரிக்கெட் ஆலோசனை குழுவின் குமார் சங்கக்கார அரவிந்த டிசில்வா முத்தையா முரளீதரன் ஆகியோர் தயக்கம் வெளியிட்ட போதிலும் மகேலஜெயவர்த்தன மலிங்கவை பரிந்துரை செய்துள்ளார் என ஐலன்ட் தெரிவித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team