இலங்கை அல்லது தென் ஆப்ரிக்காவில் ஐபிஎல் 7வது சீசன்? - Sri Lanka Muslim

இலங்கை அல்லது தென் ஆப்ரிக்காவில் ஐபிஎல் 7வது சீசன்?

Contributors

20 ஓவர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை அடுத்த ஆண்டு இலங்கை அல்லது தென் ஆப்ரிக்காவில் நடத்துவது குறித்து பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் 2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் 20- 20 போட்டிகள் நடந்து வருகிறது.

ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் இந்த போட்டிகள் நடப்பது வழக்கம்.

இந்நிலையில் அடுத்த ஆண்டுக்கான 7வது சீசன் போட்டியை நடத்தும் இடங்கள் குறித்து ஆலோசனை செய்ய ஐபிஎல் நிர்வாக குழு கூட்டம் இந்திய கிரிக்கெட் வாரிய துணைத்தலைவர் ரஞ்சிப் பிஸ்வால் தலைமையில் மும்பையில் நடந்தது.

புனே வாரியர்ஸ் அணி சமீபத்தில் நீக்கப்பட்டதால் அடுத்த ஆண்டு போட்டியில் 8 அணிகள் மோதும் என்று தெரிகிறது.

மாலை நேரத்தில் நடைபெறும் ஆட்டங்களை குறைக்கலாம் என்று போட்டி அமைப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

இரவில் போட்டி நடந்தால் அதிக ரசிகர்களை ஈர்க்க முடியும் என்பதாலும், கோடைக்காலத்தில் மாலை நேரத்தில் வீரர்கள் விளையாடுவதற்கு சிரமமாக இருக்கும் என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டி நடைபெறும் காலத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.

இதனால் பாதுகாப்பு விஷயத்தில் பிரச்னை ஏற்படக்கூடும். இதனால் போட்டியை வேறு நாட்டுக்கு மாற்றலாமா? என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

மேலும் தேர்தலுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்ட பின்னரே, முடிவுகள் வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Web Design by Srilanka Muslims Web Team