இலங்கை - இந்திய கடற்படைகளின் நெருக்கமான ஒத்துழைப்பு முக்கியமானது : உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே - Sri Lanka Muslim

இலங்கை – இந்திய கடற்படைகளின் நெருக்கமான ஒத்துழைப்பு முக்கியமானது : உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே

Contributors

எம்.மனோசித்ரா)

இலங்கை – இந்தியாவுக்கிடையிலான ஒட்டு மொத்த இரு தரப்பு ஈடுபாட்டின் முக்கிய பகுதியாகக் காணப்படும் இரு நாட்டு கடற்படைகளுக்கும் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான விஜயத்தில் இன்று ஞாயிறுக்கிழமை திருகோணமலை கடற்படை முகாம் மற்றும் கடல்சார் பயிற்சி நிலையத்திற்கு விஜயம் செய்த போதே உயர் ஸ்தானிகர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

திருகோணமலை கடற்படை முகாம் மற்றும் கடல்சார் பயிற்சி நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, 22 மில்லியன் ரூபா பெறுமதியான பயிற்சி உபகரணங்களை கடற்படையின் கிழக்கு கட்டளை தளபதியிடம் கையளித்தார்.

2019 டிசம்பரில் இந்திய கடற்படைத் தளபதி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட போது, பிராந்திய கடற்படைகளுக்கு திறனை மேம்படுத்துவதில் உதவுவதில் இந்திய கடற்படையின் அர்ப்பணிப்பிற்கமை இலங்கை கடற்படைக்கு பயிற்சி உபகரணங்களை வழங்குவதாகத் தெரிவித்திருந்தார்.

கடற்படை மற்றும் கடல்சார் பயிற்சி நிலையத்தில் வழங்கப்படும் பயிற்சிகளுக்கு உதவுவது தொடர்பில் அவதானம் செலுத்தி இந்த உபகரணங்கள் இந்தியாவினால் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளன.

இலங்கை – இந்தியாவுக்கிடையிலான ஒட்டு மொத்த இரு தரப்பு ஈடுபாட்டின் ஒரு முக்கிய பகுதியாக இரு நாட்டு கடற்படைகளுக்கும் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்புகள் அமைந்துள்ளது. இந்திய மற்றும் இலங்கை கடற்படை என்பன நீண்ட உறவைப் பேணி வருகின்றன.

அத்தோடு இந்திய கடற்படையின் பல பயிற்சி வசதிகள் இலங்கை கடற்படையால் தொடர்ந்தும் பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team