இலங்கை ஒரு பௌத்த நாடு அல்ல! - Sri Lanka Muslim
Contributors

இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதை தான் ஏற்றுக்கொள்வதில்லையெனவும் தமிழர்கள் சிறுபான்மையினம் அல்ல எனவும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

 

யாழ்ப்பாணத்தில் எஸ்.ஓ.எஸ். கிராமத் திட்டத்தை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

சிங்கள மொழி கிறிஸ்து வருடத்துக்குப் பின்னர் தான் இந்த நாட்டில்; பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னரே இராவணன் இலங்கையில் வாழ்ந்துள்ளார். ஒரு நாடு ஒரே சாதி எனும் கோசம் தவறானது.

 

வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பதை தான் விரும்பவில்லையெனவும் வடக்கு முதலமைச்சர் மேலும் கூறியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று மேலும் குறிப்பிட்டுள்ளது. (DC)

Web Design by Srilanka Muslims Web Team