இலங்கை காவல்துறையினருக்கு சீனா வழங்கும் வானொலி கருவிகளினால், எந்த பாதிப்பும் கிடையாது - சரத் வீரசேகர..! - Sri Lanka Muslim

இலங்கை காவல்துறையினருக்கு சீனா வழங்கும் வானொலி கருவிகளினால், எந்த பாதிப்பும் கிடையாது – சரத் வீரசேகர..!

Contributors

இலங்கை காவல்துறையினருக்கு சீனாவில் தயாரிக்கப்படுகின்ற வானொலி கருவி தொகை வழங்கப்படவுள்ளதாக வார இறுதி நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

அத்துடன் சமூக வலைத்தளங்களிலும் இது தொடர்பான தகவல்கள் பரப்பப்படுவதோடு குறித்த வானொலி கருவிகள் பாதுகாப்பற்றதென தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் Hiru செய்தி பிரிவு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வு பெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவை தொடர்பு கொண்டு வினவியது.

இதற்கு பதிலளித்த அவர், குறித்த உபகரணத்தின் ஊடாக நாட்டின் பாதுகாப்புக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதென தெரிவித்தார்.

அத்துடன் அவ்வாறு இலவசமாக வழங்கப்படும் பொருட்களை பெற்றுக் கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.

Web Design by Srilanka Muslims Web Team