இலங்கை கிரிக்கெட் சபையின் உயர் அதிகாரிகளுடனான சந்திப்பை இறுதி நேரத்தில் திடீரென இரத்து செய்தார் ஜனாதிபதி..! - Sri Lanka Muslim

இலங்கை கிரிக்கெட் சபையின் உயர் அதிகாரிகளுடனான சந்திப்பை இறுதி நேரத்தில் திடீரென இரத்து செய்தார் ஜனாதிபதி..!

Contributors

இலங்கை கிரிக்கெட் சபையிலுள்ள உயர் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையே நடத்தப்படவிருந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

எனினும் அடுத்த சந்திப்பு பற்றிய திகதி இதுவரை இருதரப்பிலிருந்தும் வெளியிடப்படவில்லை.

கடந்த சில மாதங்களாக இலங்கை கிரிக்கெட் அணி மீது கடும் விமர்சனங்கள் ஏற்பட்டு வருகின்றன.

தொடர் தோல்வி, அணிக்கும், சபைக்கும் இடையேயான முரண்பாடுகள் என பல விடயங்கள் கூறப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஜனாதிபதி இவ்விசேட அழைப்பை விடுத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team