இலங்கை சிறையில் உயிரிழந்த இந்தியப்பிரஜை-பரபரப்பில் அதிகாரிகள் - Sri Lanka Muslim

இலங்கை சிறையில் உயிரிழந்த இந்தியப்பிரஜை-பரபரப்பில் அதிகாரிகள்

Contributors

புத்தர் சிலைக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய பிரஜை திடீரென உயிரிழந்துள்ளார்.

குளியாப்பிட்டிய பகுதியில் புத்தர் சிலையை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்தியப் பிரஜை திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சந்தேக நபர் நேற்று இரவு திடீரென சுகயீனமுற்ற நிலையில், உடனடியாக வாரியபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்திருக்கின்றார்.

அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டிருந்ததாக சிறைச்சாலை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

47 வயதுடைய திலிப் குமார் என்ற இந்தியப் பிரஜையே இவ்வாறு உயிரிழந்திருக்கின்றார்.

அவரது சடலம் தற்போது வாரியபொல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, நீதிமன்ற உத்தரவின் பி.சி.ஆர் பரிசோதனை செய்யவும் உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team