இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கு ஸ்ரீ.மு.கா உறுப்பினர் எச்.எம்.றயீஸ் வாழ்த்து - Sri Lanka Muslim

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கு ஸ்ரீ.மு.கா உறுப்பினர் எச்.எம்.றயீஸ் வாழ்த்து

Contributors
author image

A.S.M. Javid

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டு பதவி ஏற்றுள்ள மாவை சேனாதிராசாவுக்கு தனது பாராட்டுக்களை முதல்கண் தெரிவிப்பதோடு கடந்த 60 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்களின் உரிமைகளுக்காக பல்வேறு போராட்டங்களை நடாத்திய அனுபவமுள்ள அவர் ஒரு சிறந்த தலைவராக விழங்குவார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

 

தந்தை செல்வாவிடமிருந்து பெற்றுக் கொண்ட பயிற்சியும் அனுபவமும் இவருக்கு சிறந்த ஒரு வழிகாட்டலுக்கு ஊக்குவிப்பாக திகழும் என தான் கருதுவதாகவும்.

 

இதே வேளை எதிர்காலத்தில் தமிழ் சமுகத்தின் விடுதலைக்காக போராடும் வேளைகளில் முஸ்லிம் சமுகத்தையும் ஒதுக்கி வைக்காமல் அவர்களோடு கரம் கோர்த்து முஸ்லிம் மக்களின் விடுதலைக்காகவும் ஒருங்கிணைந்து செயல்படுவார் என்பதே முஸ்லிம் சமுகத்தின் எதிர்பார்ப்புமாகும்.

 

இவ்விடயத்தில் மாவை சேனாதிராசா அவர்கள் முஸ்லிம்களையும் தமது ஒருங்கிணைந்த சகோதரர்களாகவே கருதி செயற்படுவார் என்பதில் நாம் எவ்வித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை என தான் கருதுவதாகவும் வடமாகாண சபையின்  ஸ்ரீ.மு.கா உறுப்பினர் எச்.எம்.றயீஸ் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team