இலங்கை திரும்பினால் இனி தனிமைப்படுத்தல் இலவசம்? - Sri Lanka Muslim

இலங்கை திரும்பினால் இனி தனிமைப்படுத்தல் இலவசம்?

Contributors

கொரோனா தொற்றின் நெருக்கடியினால் மத்திய கிழக்கு உட்பட வெளிநாடுகளில் தொழில்புரிந்து நாடு திரும்புகின்ற இலங்கையர்களுக்கு தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைத்து இலவச சேவையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, தனியார் துறையில் 10 சுற்றுலா விடுதி மற்றும் ஹோட்டல்கள் தெரிவுசெய்து தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைக்கும் திட்டம் கொரோனா ஒழிப்பு தேசிய செயலணி முன்வைத்திருக்கின்றது.

அதனூடாக ஒரே தடவையில் 571 பேருக்கு தனிமைப்படுத்தலில் சேரமுடியும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிடுகின்றது.

இதில், ஹோட்டல் கட்டம், உணவு, நீர் உட்பட ஏனைய வசதிகள் அனைத்தும் இலவசமாகவே வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team