இலங்கை - துருக்கி இடையில் ஒப்பந்தம், அமைச்சரவை அங்கீகாரம்..! - Sri Lanka Muslim

இலங்கை – துருக்கி இடையில் ஒப்பந்தம், அமைச்சரவை அங்கீகாரம்..!

Contributors

அமைச்சரவைக் கூட்டத்தில் 2021.03.01 அன்று எட்டப்பட்ட தீர்மானம்

 இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையில் சுங்க நடவடிக்கைகள் தொடர்பான ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நிர்வாகப் பங்களிப்புக்களுக்கான ஒப்பந்தம்

சுங்க நடவடிக்கைகள் தொடர்பாக ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நிர்வாகப் பங்களிப்புக்கள் தொடர்பாக இந்தியா, பாகிஸ்தான், மற்றும் சீனா உள்ளிட்ட தெரிவு செய்யப்பட்ட வர்த்தக இணை நாடுகள் பலவற்றுடன் இலங்கை ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. வெளிப்படைத்தன்மையுடன், ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகளுக்கமைய சட்டபூர்வமான வர்த்தக நடவடிக்கைகளுக்கு வசதியளித்தல், இரு நாடுகளுக்கிடையிலான செலவுகளைக் குறைத்தல், மற்றும் சட்ட விரோத போதைப்பொருள் கடத்தலைத் தடுத்தல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையில், அவ்வாறான ஒப்பந்தந்தை எட்டுவதற்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இருதரப்பினருக்கிடையில் குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக நிதி அமைச்சராக, பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team