இலங்கை துறைமுக அதிகாரசபையின் நிலத்தை பாதுகாக்க தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும்..! - Sri Lanka Muslim

இலங்கை துறைமுக அதிகாரசபையின் நிலத்தை பாதுகாக்க தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும்..!

Contributors

இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான 13 ஏக்கர் நிலத்தை பாதுகாக்க தொழிற்சங்கங்கள் போராட்டத்தை ஆரம்பிக்கும் என அகில இலங்கை பொது துறைமுக ஊழியர் சங்கத்தின் பிரதம செயலாளரான நிரோஷன் கோரகனகே தெரிவித்தார். துறைமுக அதிகாரசபையின் பல சேவைகளை தனியார் மயமாக்க மற்றும் தொடர்புடைய நிலத்தை விற்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கான உடன்படிக்கைகளை கைச்சாத்திட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் எனினும் தொழிற்சங்கங்கள் அதை அனுமதிக்காது என்றும் அவர் தெரிவித்தார்.


எரிசக்தி அமைச்சரை இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அவர் வலியுறுத்தினார்,
தொழிற்சங்கங்கள் நிலத்தை விற்கவோ அல்லது சேவைகளை சீன நிறுவனத்திடம் ஒப்படைக்கவோ அனுமதிக்காது. அனைத்து துறைமுக ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும் அனைத்து நிலுவைத் தொகையையும் தீர்க்குமாறும் அவர் வலியுறுத்தினார்.

Web Design by Srilanka Muslims Web Team