இலங்கை தொடர்பில் அமெரிக்கா வெளியிட்ட தகவல்..! - Sri Lanka Muslim

இலங்கை தொடர்பில் அமெரிக்கா வெளியிட்ட தகவல்..!

Contributors
author image

Editorial Team

இலங்கையின் கடந்தகால செயற்பாடுகள் குறித்து அமெரிக்க வெளியுறவுத்ததுறை புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், கடந்த ஆண்டு தேர்தல் சுதந்திரமான மற்றும் அமைதியான சூழ்நிலையில் நடைபெற்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவிட் தொற்றுநோய் இருந்தபோதிலும் தேர்தல் நன்கு நிர்வகிக்கப்பட்டதாகவும், எனினும், தேர்தல் பிரச்சாரத்திற்காக செலவிடப்படும் பணத்தின் மீது எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என்றும் அறிக்கை கூறுகிறது.

மேலும் இந்த அறிக்கை இலங்கையில் மனித உரிமைகள் குறித்தும் குறிப்பிடுகின்றது.

பொதுமக்கள் மீது பொலிஸ் தாக்குதல் போன்ற பல மனித உரிமை மீறல்கள் கடந்த ஆண்டில் நடத்தப்பட்டதாகவும் கூறுகிறது.

சிறைகளில் கூட்டம் அதிகமாக இருப்பதால் எழும் பிரச்சினைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட அறிக்கை உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஏராளமான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தாலும், பயங்கரவாத தாக்குதலில் யாரும் நேரடியாக ஈடுபடவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் அரசியலமைப்பின் 20 வது திருத்தம் நிறைவேற்று அதிகாரங்களை எவ்வாறு பலப்படுத்தியுள்ளது என்பதையும் அமெரிக்க வெளியுறவுத்துறையால் வெளியிடப்பட்ட அந்த அறிக்கை விவரிக்கிறது.

Web Design by Srilanka Muslims Web Team