இலங்கை- நியூசிலாந்து முதலாவது ஒரு நாள் போட்டி நிறுத்தம் - Sri Lanka Muslim

இலங்கை- நியூசிலாந்து முதலாவது ஒரு நாள் போட்டி நிறுத்தம்

Contributors

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 288 ஓட்டங்களை எடுத்தது.

இலங்கை அணி சார்பாக டில்ஷன் 81 ஓட்டங்களும், சங்கக்காரா 79 ஓட்டங்களும் எடுத்தனர்.

இந்நிலையில் நியூசிலாந்து அணி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கும்போது மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது.

போட்டி இடைநிறுத்தப்படும்போது நியூசிலாந்து அணி 4.2 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை இழந்து 13 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி எதிர்வரும் 12ம் திகதி நடைபெறவுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team