இலங்கை பணியாட்கள் சவுதியில் மீண்டும் பணிக்கு திரும்பினர் - Sri Lanka Muslim

இலங்கை பணியாட்கள் சவுதியில் மீண்டும் பணிக்கு திரும்பினர்

Contributors

சவுதி அரேபியாவில் கட்டிட நிர்மாணத்துறையில் பணியாற்றி வந்த நிலையில், பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இலங்கையர்கள் மீண்டும் பணிக்கு திரும்பி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இலங்கையர்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த வேதனத் தொகை வழங்கப்படாத நிலையில் அவர்கள் கடந்த வாரம் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் குறித்த இலங்கையர்களை ஒப்பந்தம் செய்த முகவர்களின் தலையீட்டின் பின்னர், முறையான வேதனத் தொகையை வழங்க, நிர்மாணத்துறை நிறுவனம் இணங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.(sf)

Web Design by Srilanka Muslims Web Team