இலங்கை பயணிகள், அரபு அமீரகத்துக்குள் நுழைவதற்கான தடை 28 ஆம் திகதிவரை நீடிப்பு..! - Sri Lanka Muslim

இலங்கை பயணிகள், அரபு அமீரகத்துக்குள் நுழைவதற்கான தடை 28 ஆம் திகதிவரை நீடிப்பு..!

Contributors

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள்,  ஐக்கிய அரபு அமீரகத்துக்குள் நுழைவதற்கான தடை எதிர்வரும் 28 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

இவ்வறிவித்தல் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளால் தமக்கு விடுக்கப்பட்டுள்ளதாக டுபாயை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது. 

கடந்த 14 நாட்களுக்குள் மேற்குறிப்பிட்ட நாடுகளுக்குச் சென்ற பயணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தின் எந்த இடத்துக்கும் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எமிரேட்ஸ், அமீரக கோல்டன் வீஸா வைத்திருப்போருக்கும் இராஜ தந்திரிகளுக்கும் அமீரகத்துக்குள் நழையத் தடையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team