இலங்கை- பாகிஸ்தான் டெஸ்ட் இன்று ஆரம்பம் - Sri Lanka Muslim

இலங்கை- பாகிஸ்தான் டெஸ்ட் இன்று ஆரம்பம்

Contributors

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று அபு­தா­பியில் உள்ள ஷேய்க் சியாத் மைதா­னத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில், இலங்கை டெஸ்ட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திலகரட்ண டில்சான் ஓய்வு பெற்ற நிலையில் இன்றை போட்டியில், கௌசல் சில்வா, ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கவுள்ளார்.
ஒருநாள் போட்டியில் பங்கேற்காத மஹேல ஜெயவர்தன மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோர் இப்போட்டியில் களமிறங்கவுள்ளனர்.
இதேவேளை, ரங்கன ஹேரத்துடன், தில்ரூவான் பெரேரா அல்லது சச்சிந்த சேனாநாயக்க இருவரில் ஒருவர் சுழற்பந்து வீச்சாளராக விளையாட உள்ளார்.
இரு அணி­களும் சம பலம் கொண்­ட­வையாக இருப்­பினும் குறித்த மைதானம் பாகிஸ்தான் அணிக்கு சாத­க­மானது எனலாம். இம் மைதா­னத்தில் இது வரை 4 டெஸ்ட் போட்­டிகள் இடம்­பெற்­றுள்­ளன. பாகிஸ்தான் அணி­யுடன் இலங்கைஇ தென்­னா­பி­ரிக்க மற்றும் இங்­கி­லாந்து அணிகள் மோதி­யுள்­ளன.
பாகிஸ்தான் – தென்­னா­பி­ரிக்­கா­வு­டனும் இங்­கி­லாந்­து­டனும் இம் மைதா­னத்தில் வெற்றி பெற்­றுள்­ளது. அத்­தோடு பாகிஸ்தான்இ இலங்­கை­யுடனும் தென்­னா­பி­ரிக்­கா­வு­ட­னான மற்­று­மொரு போட்­டி­யிலும் மோதி சம­நி­லையில் முடிந்­துள்­ளது.
இதே­வேளை, இறு­தி­யாக இலங்கை விளை­யா­டிய ஐந்து டெஸ்ட் போட்­டி­களில் ஒன்றில் வெற்­றியும் மூன்றில் தோல்­வி­யையும் சந்­தித்­துள்­ளது. ஒரு போட்டி சம­நி­லையில் முடிந்­துள்­ளது. பாகிஸ்தான் அணியை பொறுத்­த­வரை இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று மூன்று போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.
இரு அணிகளுக்குமிடையிலான ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளதால் டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணிக்கு பாகிஸ்தான் அணி சவாலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Web Design by Srilanka Muslims Web Team