இலங்கை, பாகிஸ்தான் முதல் 20க்கு 20 போட்டி இன்று துபாயில் ஆரம்பம் - Sri Lanka Muslim

இலங்கை, பாகிஸ்தான் முதல் 20க்கு 20 போட்டி இன்று துபாயில் ஆரம்பம்

Contributors

இருபதுக்கு 20 போட்டிகளில் முதன்மை நிலையினை தக்க வைத்துக்கொள்ள உறுதிக்கொண்டுள்ள இலங்கைக் கிரிக்கெட் அணியினர் பாகிஸ்தானுடனான இரண்டு போட்டிகளின் முதலாவது போட்டியில் ரம்மியமான துபாய் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இன்று பி. ப. 9.30 மணிக்கு மோதவுள்ளனர்.

இந்தப் போட்டியில் மாத்திரமல்ல, அதே மைதானத்தில் வெள்ளிக்கிழமையன்று நடைபெறவுள்ள இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெறுவதற்கு இலங்கை அணி சிறந்த முறையில் களத் தடுப்பில் ஈடுபட்டாலே போதும், வேறு எந்த மாற்றத்தையும் செய்யத் தேவையில்லை.

எமக்குக் கிடைக்கப் பெற்ற அறிக்கைகளின்படி அங்கு தற்போது மிகக் குளிரான காலநிலை நிலவுவதாக தெரிய வருகின்றது. பொதுவாக வெப்பமான சூழ்நிலையில் விளையாடுகின்ற இரு அணிகளுக்கும் இது பொருத்தமானதான நிலையாகும். இவ்விரு அணிகளும் சுழல்பந்து வீச்சாளர்களைக் கொண்டுள்ளன. விக்கெட்டுகள் சுழல் பந்து நேய விக்கெட்டுக்களாக இருக்கும் என்பது உறுதி.

வழமைபோன்று இரு அணிகளும் நிலைமைகளையும் விக்கெட்டையும் பார்வையிட்ட பின்னரே தமது அணிகளின் வீரர்களை பெயரிடவுள்ளன. அணிகள் களத்தில் பல சுழல்பந்து வீச்சாளர்களைக் கொண்டிருக்கும் என்பதற்கான சமிக்ஞைகள் காணப்படுகின்றன.

திறமையான சஹீட் அஜ்மல்

இலங்கை அணியின் சுழல் பந்து வீச்சாளர்களான சசித்ர சேனநாயக்க, அஜந்த மென்டிஸ் மற்றும் ரமித் ரம்புக்வெல்ல பாகிஸ்தான் அணியின் சஹீட் அஜ்மல் மற்றும் மொஹமட் ஹபீஸ் ஆகியோருள் ஊடுருவிச் செல்லத்தக்க சுழல் பந்து வீச்சாளராக அஜ்மல் காணப்படுகின்றார். அஜ்மல் இன்று உலகில் சிறந்த சுழல் பந்து வீச்சாளரக பரிணமிக்கின்றார். மிகச் சூட்சுமமான வெவ்வேறு வகையான பந்து வீச்சுக்களுடன் மொத்தமாக 24 பந்து வீச்சுக்களினாலேயே இலங்கை துடுப்பாட்ட வீரர்களை அவரால் மிரட்ட முடியும்.

பாகிஸ்தான் அணியின் முக்கிய வீரர்களான மொஹமட் இர்பான், அப்துர் ரஸ்ஸாக் மற்றும் சுஐப் மலிக் ஆகியோர் காயமடைந்து அணியில் இடம்பெறாத நிலையில் பலவீனமாக இருக்கும் பாகிஸ்தான் அணியினை எதிர்கொள்ள இலங்கை அணியினர் திடத்துடனும் ஆர்வத்துடனும் உள்ளனர்.

ஆனால் தென்னாபிரிக்க சுற்றுப் பயணம் தந்த மகிழ்ச்சியிலிருக்கின்ற அதேவேளை இளம் வீரர்களை புறந்தள்ளியிருக்கும் பாகிஸ்தான் இரு போட்டிகளிலும் வெற்றிபெற்று முதன்மை இடத்திலிருந்த இலங்கையை வீழ்த்துவதற்கு மிக உறுதியாக உள்ளது.

முக்கிய பங்கை வகிக்கவிருக்கும் ஹபீஸ் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் சுழல் பந்து வீச்சாளருமான மொஹமட் ஹபீஸ் பாகிஸ்தான் அணியினை வழிநடத்தவுள்ளார். விளையாட்டில் தனது திறமைகளை நிரூபித்துள்ள அவர் இரு துறைகளிலும் தலைமை வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இரு அணிகளிலும், இலங்கை சிறந்த வீரர்களைக் கொண்டுள்ளது. அனைத்து வகையிலும் உறுதியான நிலையிலுள்ள நிலையில் இரு போட்டிகளிலும் தோல்வியடைவது பாரிய பின்னடைவாக அமையும். ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான திலகரத்ன டில்சான் மற்றும் குசல் ஜனித் பெரேரா ஆகியோர் நியூசிலாந்திற்கு எதிரான போட்டியின் போது திடமான நிலையிலிருப்பதை நிரூபித்துள்ளனர்.

டில்சான் போட்டியில் விசேடமானதொரு பொறுப்பினை வகிக்க வேண்டியுள்ளது. அதிரடி ஆட்டத்தின் மூலம் அனைத்து போட்டிகளிலும் நியூசிலாந்தை திணறடித்து திடமான நிலையிலிருக்கும் அவர் தனது அனுபவத்தின் மூலம் அதிக ஓட்டங்களைக் குவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜனித் பெரேராவைப் பொறுத்தவரை சனத் ஜயசூரியவுக்கு அடுத்தபடியான சிறந்த வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சனத் ஜயசூரியவின் அனைத்து பண்புகளும் விளாசி விளையாடும் திறனும் கொண்டவராக இவர் காணப்படுவதால் மற்றுமொரு மாஸ்டர் பிளாஸ்டராக வருவதற்கான வாய்ப்புள்ளது. அவர் இன்னும் எச்சரிக்கையுடன் விளையாடினால் சனத் ஜயசூரியவின் இலக்குகளை இவரால் அடைய முடியும்.

மிகச் சிறந்த விக்கெட்காப்பு

மிஸ்டர், ரிலையபிள் என அழைக்கப்படும் இடது கை குமார் சங்கக்கார பொறுப்புடன் துடுப்பாட்டத்தில் ஈடுபட்டு ஒட்டங்களைப் பெறுவார். அவர் சிறந்தவொரு விக்கெட் காப்பாளர் என்ற வகையில் சிறந்த மனோபாவமும் விக்கட்டின் அனைத்து பக்கங்களிலும் பந்துகளை அடிக்கக் கூடிய திறனும் கொண்ட அவர் பாகிஸ்தானின் தாக்குதல்களை இலகுவாக சமாளிப்பார் என்பது நிச்சயம்.

முன்னாள் இலங்கை அணித் தலைவரான குமார் சங்கக்கார மற்றுமொரு முன்னாள் இலங்கை அணித் தலைவர் தந்தைக்கான விடுமுறையில் இருந்து நிலையில் அதேபோன்று திலகரத்ன டில்சான் டெஸ்ட் போட்டிகளிலிருந்து இளைப்பாறிய நிலையிலும் சுற்றுப் பணத்தில் சிறந்த முறையில் விளையாட வேண்டுமென்பதற்காக தன் மீது அழுத்தங்களை ஏற்படுத்திக் கொள்ளாது முன்னதாக இருபதுக்கு 20 உலகக் கிண்ண போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றபெற முடிந்தது. இந்த ஒருவாரம் நடைபெறும் இந்தப் போட்டியிலும் தனது உறுதியினை வெளிப்படுத்துவார்.

தலைவரான தினேஸ் சந்திமால் அவனைவரது கவனத்தையும் ஈர்ப்பார். தினேஷ் சந்திமால் தன்னை ஒரு தலைவராக நிரூபித்துள்ளார். துடுப்பாட்டத்தில் அவர் பெறும் குறைவான ஓட்டங்களே கவலையை தருவதாகக் காணப்படுகின்றது. இது அவரது மனதில் இருந்தாலும் ஓட்டம் பெறும் செயற்பாட்டிற்கு மீண்டு விடும் நம்பிக்கை அவரிடம் கணப்படுகின்றது.

வேகமாகப் பெறுதிகளைப் பெறும் தினேஸ், அஞ்சலோ மத்தியூஸ், லஹிரு திருமன்ன மற்றும் திசேர பெரேரா ஓட்டங்களைக் குவிப்பதில் கவனம் செலுத்த வேண்டிய அதேவேளை நுவான் குலசேகர மற்றும் ளிசித் மலிங்க ஆகியோர் ஒன்றில் அஜந்த மென்டிஸ், ரமித் ரம்புக்வெல்ல அல்லது சசித்ர சேனநாயக்கவுடன் இணைந்து எதிரணியினரின் துடுப்பாட்டத்தை கட்டுப்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபட வேண்டும். பாலைவனப் பிரதேசத்தில் இருக்கின்ற ஏராளமான இலங்கையர்கள் சத்தமெழுப்பும் கருவிகளைக் கொண்டு வருவதற்கும் பெருமையுடன் சிங்கக் கொடிகளை அசைப்பதற்கும், இலங்கை கிரிக்கெட் அணியிருக்கு மகிழ்ச்சியூட்டி ஊக்கப்படுத்தி எழுச்சியூட்டும் தமது முழு ஆதரவினை வழங்குவதற்கும் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team