இலங்கை, பாகிஸ்தான் முதல் ஒருநாள் போட்டி இன்று ஆரம்பம் - Sri Lanka Muslim

இலங்கை, பாகிஸ்தான் முதல் ஒருநாள் போட்டி இன்று ஆரம்பம்

Contributors

இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட முதல் ஒரு நாள் போட்டி இன்று சார்ஜா சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெறும்.

இலங்கை அணிக்கு அணித் தலைவராக அஞ்சலோ மெத்திவ்ஸ் செயற்படுகிறார். பாகிஸ்தான் அணிக்கு மிஸ்பா உல்ஹக் தலைமைதாங்குகிறார்.

இதேவேளை இலங்கை, பாகிஸ் தான் அணிகள் மோதிய 20க்கும் 20 போட்டியில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு போட்டிகளிலும் வெற்றிபெற்றதால் தொடர் சமநிலையில் முடிவுற்றது.

ஆனால் இலங்கை அணி 20 க்கு 20 தரப்படுத்தலில் முடிசூடா மன்னனாக தொடர்ந்தும் காணப்படுகிறது.

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன, சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் ஆகியோர் ஒருநாள் போட்டியில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரங்கன ஹேரத்துக்குப் பதிலாக சுழற்பந்து வீச்சாளர் அஜந்த மென்டிஸ¤ம், மஹேலவுக்கு பதிலாக தித்ருவன்ன் விதானகேயும் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

வளர்ந்து வரும் முன்னணி வீரரான கித்ருவன் விதானகே இடது கை துடுப்பாட்ட வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சிரேஷ்ட வீரர்களான குமார் சங்கக்கார, திலகரட்ன, டில்சான் ஆகியோர் இலங்கை அணியில் இடம்பெற்றிருப்பது அணிக்கு மேலும் பலத்தைக் கொடுக்கும்.

முதலாவது ஒருநாள் போட்டி 18ம் திகதி சார்ஜா மைதானத் திலும் 2வது போட்டி 20ம் திகதி டுபாயிலும், மூன்றாவது போட்டி 22ம் திகதி சார்ஜாவிலும் 4வது போட்டி 25ம் திகதி அபுதாபி யிலும் 5வது போட்டி 27ம் திகதி அபுதாபியிலும் இடம்பெ றும்.

Web Design by Srilanka Muslims Web Team